கேரளா ஸ்டைல் சிக்கன் 65 – கமகம சுவையில் எப்படி செய்வது?

Photo of author

By Divya

கேரளா ஸ்டைல் சிக்கன் 65 – கமகம சுவையில் எப்படி செய்வது?

அசைவத்தில் அதிக பேர் சிக்கனை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சிக்கனில் பல வகை ரெசிபிக்கள் உள்ளது. அதில் சிக்கன் 65 மிகவும் சுவையான ரெசிபி. இதை எவ்வாறு சுவையாக செய்யலாம் என்று விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)சிக்கன் – 1/2 கிலோ
2)மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
3)சீரகத் தூள் – 1 ஸ்பூன்
4)கரம் மசாலா – 1 ஸ்பூன்
5)மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
6)அரிசி மாவு – 3 ஸ்பூன்
7)இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
8)உப்பு – தேவையான அளவு
9)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

சிக்கன் 65 எப்படி செய்வது?

அரை கிலோ எலும்பு இல்லாத சிக்கன் வாங்கிக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு இதில் 3 முதல் 4 ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் மிளகுத் தூள், 1 ஸ்பூன் சீரகத் தூள், 1 ஸ்பூன் கரம் மசாலா, 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை 1/2 மணி நேரத்திற்கு ஊறவிட்டு பின்னர் பொரிக்க வேண்டும்.

அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும். பிறகு 1 கொத்து கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து சிக்கனுடன் சேர்த்து சாப்பிடவும்.