Kerala Style : கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் பச்சடி – எளிய முறையில் அருமையான சுவையில் செய்வது எப்படி?
உடலுக்கு அதிக சத்துக்கள் வழங்க கூடிய காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். இந்த காயை வைத்து பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் கேரளா முறைப்படி செய்தால் அதிக சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*வெண்டைக்காய் – 200 கிராம்( வட்டமாக நறுக்கியது)
*தயிர் – 1 1/2 கப்
*தேங்காய் எண்ணெய் – 5 தேக்கரண்டி
அரைக்க:-
*தேங்காய் துருவல் – 5 தேக்கரண்டி
*பச்சை மிளகாய் – 3
*கடுகு – 1 தேக்கரண்டி
*சீரகம் – 1/4 தேக்கரண்டி
*தயிர் – 2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
தாளிக்க:-
*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*வர மிளகாய் – 4
*கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:-
வெண்டைக்காய் 10 முதல் 12 வரை எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் வாணலி வைத்து 5 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை போட்டு கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸி ஜார் எடுத்து அதில் 5 தேக்கரண்டி அளவு தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளவும். அதனோடு 3 பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி சீரகம், 2 அல்லது 3 தேக்கரண்டி தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 1/2 கப் எடுத்து நன்கு கலக்கி அந்த வெண்டைக்காய் பவுலில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை அதில் சேர்த்து’நன்கு கலந்து விடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு, 4 வர மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த தாளிப்பை தயார் செய்து வைத்துள்ள வெண்டைக்காய் பச்சடியில் சேர்த்து கிளறி விடவும். வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் இந்த பச்சடி கேரளா மக்களின் விருப்ப உணவு ஆகும். இவை அதிக சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும்.