கேரளா ஸ்டைல் பால் கொழுக்கட்டை – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?

0
218
#image_title

கேரளா ஸ்டைல் பால் கொழுக்கட்டை – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை கேரளா மக்களின் பேவரைட் இனிப்பு பண்டமாகும். இவை விசேஷ காலத்தில் அதிகம் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுக்கட்டை ரெசிபி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி மாவு – 1 கப்

*பால் – 1 1/2 கப்

*சர்க்கரை – 1/2 கப்

*குங்குமப்பூ – சிட்டிகை அளவு

*ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

*தேங்காய் – 2 தேக்கரண்டி

*உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும். அதனை சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பின்னர் செய்து வைத்துள்ள கொழுக்கட்டையை சேர்த்து பால் ஊற்றி கொதிக்க விடவும்.

பிறகு குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும். இவ்வாறு செய்தால் பால் கொழுக்கட்டை செம்ம ருசியாக இருக்கும்.

Previous articleதலைமுடி கருகருனு நீளமாக வளர இந்த ஒரு சீரம் பயன்படுத்துங்கள்!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு தை பிறந்தவுடன் வழி பிறக்கும்! உங்கள் ராசி இருக்கானு செக் பண்ணிக்கோங்க!