“பலாக்கொட்டை கத்திரி கூட்டு” கேரளா முறைப்படி செய்வது எப்படி?

Photo of author

By Divya

“பலாக்கொட்டை கத்திரி கூட்டு” கேரளா முறைப்படி செய்வது எப்படி?

பலாக்கொட்டை மற்றும் கத்தரிக்காய் வைத்து செய்யப்படும் கூட்டு கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த பலாக்கொட்டை கத்திரி கூட்டு சூடான சாததிற்கு சிறந்த சைடிஸாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கத்திரிக்காய் – 100 கிராம்

*பலாக்கொட்டை – 10

*தேங்காய் – ஒரு மூடி (துருவியது)

*பூண்டு – 4 பற்கள்

*வர மிளகாய் – 4

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தகேரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

கூட்டு செய்வதற்கு முதலில் 100 கிராம் அளவு கத்திரிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் 10 பலாக்கொட்டை சேர்த்து கொள்ளவும். இவை வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

அடுத்து 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய், 4 வர மிளகாய் மற்றும் 1 பல் பூண்டு சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை வேகும் கத்தரிக்காய் கலவையில் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் காய் வெந்து கூட்டு பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாயில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த தாளிப்பு கலவையை பலாக்கொட்டை கத்திரிக்காய் கூட்டில் சேர்த்து கலந்து விடவும்.