கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி?

0
151
#image_title

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி?

மோர் வைத்து செய்யப்படும் உணவு மோர் கறி. இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த மோர் கறி சூடான சாதத்திற்கு சிறந்த சைடிஸாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தயிர் – 1 கப்

*பச்சை மிளகாய் – 4

*சீரகம் – 1 தேக்கரண்டி

*தேங்காய் துருவல் – 1/2 கப்

*பூண்டு – 2 பற்கள்

*இஞ்சி – 1 துண்டு

*சின்ன வெங்காயம் – 15

*கருவேப்பிலை – 2 கொத்து

*கடுகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*உப்பு – 1/2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 2

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

மோர் கறி செய்வதற்கு முதலில் ஒரு கப் தயிரை எடுத்து மத்து வைத்து கட்டி இல்லாமல் நன்கு கடைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து 1/2 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜார் எடுத்து அதில் 2 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம், துருவி வைத்துள்ள தேங்காய், 1 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 4 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அரைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கோலா வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். பச்சை வாசனை நீங்கியப் பின் கடைந்து வைத்துள்ள தயிரை ஊற்றி 1 நிமிடம் வரி விட்டு அடுப்பை அணைக்கவும். தயிரை வேக வைக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து பொரிய விடவும். அடுத்து 1 கொத்து கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள 5 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் எடுத்து வைத்துள்ள வர மிளகாயை கிள்ளி போட்டு வதக்கி விடவும்.

பின்னர் கொதிக்க வைத்துள்ள தயிர் கலவையை அதில் சேர்த்து கிண்டி விடவும். மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த மோர் கறியை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அட அட என்ன ஒரு டேஸ்ட் என்பது போல் இருக்கும்.

Previous articleகேரளா பாரம்பரிய இனிப்பு: “மட்டை அரிசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?
Next articleபாட்டி வைத்தியம்.. “மூட்டு வலி”? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!!