கொளுத்தி எடுக்கும் வெயிலில் இருந்து தங்கள் உடலை காத்துக் கொள்வது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் பூமியில் வெப்பம் அதிகரித்து வருகிறது.இந்த ஆண்டு மார்ச் தொடக்கத்திலேயே கோடை காலம் தொடங்கி விட்டது.முன்பெல்லாம் கத்தரி வெயில் நாட்களில் தான் சூரியன் சுட்டெரிக்கும்.ஆனால் தற்பொழுது கோடை காலம் தொடங்கியதில் இருந்து தாங்க முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது.
காலை 11 மணிக்கே நெருப்பின் மீது நடப்பது போன்று இருக்கிறது.இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
உடலில் அதிகளவு சூடு இருந்தால் மஞ்சள் காமாலை,சிறுநீர் கழித்தலில் பிரச்சனை,சிறுநீரக கல்,வயிற்று கடுப்பு,கண் எரிச்சல்,அம்மை,தோல் தொடர்பான பாதிப்புகள்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
கோடை காலத்தில் உடலில் அதிகளவு பித்தம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம்.அதிகப்படியான வெயிலால் உடலில் உள்ள நீர்ச்சத்து தோல் மூலம் வெளியேறி உடல் சோர்வு,மயக்கம்,உடல் வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை எவ்வாறு காத்துக் கொள்வது என்று தெரிந்து அதை பின்பற்றுங்கள்.
முதலில் காலையில் எழுந்ததும் தங்களால் முடிந்த அளவு நீர் அருந்துங்கள்.ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை நீர் அருந்துவது நல்லது.
கார உணவுகளை தவிர்த்து குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவது நல்லது.டீ,காபிக்கு பதில் பாலில் சீரகம்,கொத்தமல்லி,சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வரலாம்.
தயிர் அல்லது மோரில் சிறிது மஞ்சள் சேர்த்து பருகலாம்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
வெந்தயம்,சீரகம் ஊற வைத்த நீர் அருந்துவது நல்லது.எலுமிச்சம் பல சாற்றில் சிறிது உப்பு சேர்த்து அருந்தலாம்.தலை,உடல்,தொப்புளுக்கு விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.இதனால் உடல் சூடு குறைய வாய்ப்பு இருக்கிறது.