உதட்டை சிவப்பாக மாற்றுவது எப்படி?? இதோ நச்சுன்னு 4 டிப்ஸ்!!

0
158
how-to-reduse-in-lip-pigmentation
how-to-reduse-in-lip-pigmentation

உதட்டை சிவப்பாக மாற்றுவது எப்படி?? இதோ நச்சுன்னு 4 டிப்ஸ்!!

ஒருவருக்கு உடலில் மெலனின் அளவைப் பொறுத்தே உடலின் நிறம் காணப்படும். அதிலும் ஒரு சிலருக்கு முகம் பொலிவுற்று இருந்தாலும் உதடு மட்டும் சற்று கருமையாக காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் அன்றாடம் செய்யும் சிறு தவறுகள் தான் உதடு கருமையாக காரணம்.

முதலாவதாக ஒரு சிலர் உதட்டை அவர்களின் உட்புறமாக மடிப்பதை பழக்கமாக வைத்திருப்பர். இவ்வாறு செய்தால் உதடு கருமையாக மாறும்.

இரண்டாவதாக அதிக அளவு புகைப்பிடித்தாலும் உதடு கருமையாக மாறிவிடும்.

மூன்றாவது உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டாலும் இவ்வாறு உதடு நிறம் மாறிவிடும்.

நான்காவதாக தேவையற்ற காஸ்மெட்டிக்ஸ் உபயோகிப்பதால் அதில் ஏற்படும்  வேதிவினைகளாலும் உதடு கருப்பாக அதிக வாய்ப்புள்ளது.

இந்த உதடு கருமையை நீக்க அன்றாட இந்த மூணு டிப்ஸ் பாலோ செய்தாலே போதும் பழைய நிறத்திற்கு கொண்டு வந்து விடலாம்.

முதலில் நம் உதட்டை உட்புறமாக மடிக்கும் பழக்கத்தை விட வேண்டும்.

இரண்டாவதாக தினம்தோறும் தூங்குவதற்கு முன் தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைக்க வேண்டும்.இவ்வாறு வைப்பது உதடு நிறம் மாறுவதற்கு மட்டுமின்றி உடல் உறுப்புகளின் அனைத்திலும் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.

மூன்றாவதாக தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை சிறிதளவு கலந்து உதட்டின் மேல் தடவிக்கொள்ள வேண்டும்.இதனை அப்படியே ஐந்திலிருந்து பத்து நிமிடம் விட்டு விட்டு கழுவிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்து வர உதட்டின் மேல் உள்ள கருமையானது நீங்கும்.இதில் உள்ள தேன் ஆனது இறந்த செல்களை நீக்க மிகவும் உதவி காரணமாக இருக்கும்.

நான்காவதாக சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் பால் கலந்து பேஸ்ட் போல் செய்து அதனை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும்இதனையும் பத்திலிருந்து 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவிக்கொள்ள வேண்டும்.

இந்த நான்கு டிப்ஸை தொடர்ந்து செய்து வந்தாலே உதட்டின் மேல் இருக்கும் டான் போன்றவை நீங்கி உதடு பளபளக்க ஆரம்பிக்கும்.

Previous articleவாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ பர்ஃபி” – சுவையாக செய்வது எப்படி?
Next articleதொடங்கியது குளிர்காலம்! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!!