தொடங்கியது குளிர்காலம்! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

0
56
#image_title

தொடங்கியது குளிர்காலம்! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

தற்பொழுது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நாம் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அவ்வாறு குளிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவு வகைகள் பற்றி அறிந்து கெள்ளலாம்.

குளிர்காலம், மழைகாலம் வந்துவிட்டால் அனைவருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் வந்துவிடும். அதாவது சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் எளிமையாக நம்மை பிடித்து விடும். ஆனால் அதிலிருந்து குணமாக சில நாட்கள் எடுக்கும். எனவே நாம் குளிர்காலத்தில் நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்னென்ன வகையான உணவுகளை சாப்பிடுவது என்பது பற்றி பார்க்கலாம்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள்…

* குளிர்காலத்தில் நோய். எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நாம் பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். பச்சை காய்கறிகளும் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொடுக்கும்.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நாம் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முள்ளங்கியில் வைட்டமின் சத்துக்கள், மற்றும் தாதுக்கள் ஆகியவை அதிகளவில் உள்ளது.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நாம் சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டு வரலாம். சக்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.

* நமது உடலில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்றால் நாம் பீட்ரூட் சாப்பிடலாம். பண்ருட்டி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்த பலனை தரும். பீட்ரூட்டில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.

* நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள பொருள் கேரட் ஆகும். இந்த கேரட்டை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம். ஜூஸ் தயார் செய்தும் குடிக்கலாம். இதன் மூலம் நமக்கு அதிகளவு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கின்றது.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள முருங்கைக் காயை நாம் சாப்பிட்டு வரலாம். முருங்கைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நாம் முட்டைக் கோஸ் சாப்பிடலாம். முட்டைக் கோஸில் தாதுக்கள், வைட்டமின் சத்துக்கள் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளது.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய மற்றொரு சிறப்பான பொருள் ப்ரக்கோலி ஆகும். இந்த ப்ரக்கோலியில் தாதுக்கள் அதிகளவில் இருக்கின்றது.