உடல் எடை குறைய சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

Photo of author

By Amutha

உடல் எடை குறைய சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

Amutha

உடல் எடை குறைய சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

சீரகம் நமது உடலில் உள்ள கலோரிகளை எரித்து உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைக் குறைக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகளும், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் ஏராளமாக உள்ளன. சீரகத்தை பல வழிகளில் பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம். அது எவ்வாறு என பார்ப்போம்.

1. 2 ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து 15 நாட்களுக்கு தொடர்ந்து  குடித்து வர உடல் எடை கணிசமான அளவில் குறையும்.

2. தயிரில் ஒரு ஸ்பூன் சீரக பொடியை கலந்து தினமும் குடித்து வர உடல் எடையை குறைக்கலாம்.

3. அரை ஸ்பூன் சீரகப் பொடியை வெதுவெதுப்பான நீரில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் தேனை கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.

4. உடல் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் தினமும் ஏதேனும் ஒரு சூப்பில் சீரகப் பொடியை தூவி குடித்து வர உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

5. எலுமிச்சையும், இஞ்சியும் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை துண்டுகளாக போட்டு வேக வைக்கவும். இதில் துருவிய இஞ்சி, அரை முடி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகப்பொடி கலந்து இரவு நேரங்களில் சாப்பிட்டு வர உடல் எடை சீரான அளவில் குறைந்து கொண்டே வரும்.