கேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

Photo of author

By CineDesk

கேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் ராகுல் காந்தி அலுவலகத்திற்குள் சிலர் நுழைந்த திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதற்கு கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிட்டி கட்சியின் மீது காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டினர். இதனால் கேரளா  காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கேரளா மாநில திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அதிர்ஷ்டம் என்னவென்றால் எந்த விதமான பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேரள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனால் அவரது வருகையையொட்டி தான் சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்டது. இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினரே காரணம் என சிபிஎம் கட்சி தொண்டர்கள் குற்றச்சாட்டினர். இதற்கிடையே அலுவலகத்தின் மீது குண்டி வீசியதால் சிபிஎம் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அப்பகுதியை பாதுகாத்து பலப்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.