உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்!

Photo of author

By Rupa

உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்!

Rupa

உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்!

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில்தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பாக கல்லூரி விளையாட்டு உள்ளரங்கில் இந்த ஆண்டுக்கான செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடை அணிந்து செஸ் விளையாட்டு போட்டியில் பங்குபெற்று போட்டிகளில் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து மாணவர்களை செஸ் காயின்களாக பயன்படுத்தும் ஹியூமன் செஸ் விளையாட்டு போட்டியும் நடத்தப்பட்டது.மாணவர்களைக் கொண்டு விளையாடப்பட்ட ஹியூமன் செஸ் விளையாட்டு போட்டி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.