செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்!

0
81

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்!

இன்று மாலை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தொடக்க விழாவை சிறப்பாக நடத்த கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கலை நிகழ்ச்சிகளில் சுமார் 900 வீரர்கள் கலந்துகொள்ள இருந்தனர். இந்நிலையில் இப்போது அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனால் 900 கலைஞர்களுக்கும் உடனடியாக கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மாலை கலை நிகழ்ச்சிகள் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.