வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

Photo of author

By Janani

வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

Janani

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே டெபேராவை ராகேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார்.

தற்போது ஆறுமாத கர்ப்பிணியான இருந்த அவரை வரதட்சணை கேட்டு தினமும் தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால், டெபேரா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவதன்று, மாமியார் வீட்டிற்கு வந்த ராகேஷ் மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.மேலும், தனிக்குடிதனம் செல்லும் அழைத்துள்ளார்.

இதற்கு டெபேரா மறுக்கவே கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கத்தியால் வெட்டியுள்ளார்.மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த டெபேராவின் தாயாரையும் கத்தியால் வெட்டினார். இருவரையும் மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராகேஷை இன்னும் கைது செய்யவில்லை என டெபேராவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.