நான் ஒரு விவசாயி : மு க ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது : முதல்வர் பேச்சு

0
116

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் .பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்த முதல்வர் பழனிசாமி,நான் ஒரு விவசாயி என்றும் மு.க.ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில்,நான் ஒரு விவசாயி என்பதால் ஏழை விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என்றும், ஆனால் விவசாயிகளுக்கு எதிராக ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தது மு.க.ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து பேசிய அதிமுக எம்.பியான எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் குறித்து செய்தியாளர்களிடம் பற்றி கேட்டபொழுது ,வேளாண் மசோதாவில் சாதகமான அம்சங்கள் இருப்பதால் தான் அதனை ஆதரித்தோம் என்றும் மேலும் இதுகுறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியிடம் அவரிடம், விளக்கம் கேட்போம் என்று தமிழக முதல்வர் பதிலளித்தார்.

மேலும்,தமிழக பாஜக தலைவர் முருகன், கோட்டையில் பாஜக கொடிபறக்கும் என்று கூறிய கருத்துக்கு, கோட்டையில் என்றும் தேசியக் கொடிதான் பறக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்ததோடு, தமிழகத்தில் என்றும் அதிமுக ஆட்சியை தொடரும் என்று கூறியுள்ளார்.

மேலும், செய்தியாளர்கள் சசிகலா விடுதலை செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்கு பதிலளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

Previous articleஅதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!
Next articleதமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு