அதிகரித்து வரும் காவிரி நீர்வரத்து !! 70 ஆயிரம் கன அடியாக உயர்வு !!

0
75

ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக அணையிலிருந்து முழுமையாக நிரம்பி , உபரிநீர் தமிழகத்தை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணசாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு சராசரியாக அதிகரித்து வரும் நிலையில் ,தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்று நீர் திறக்கப்பட்டு, நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று (செட். 21) காலை நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்த பின்னர், மாலை நிலவரப்படி 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று (செப்22) காலை நிலவரப்படி 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துள்ளதாகவும் ,மேலும் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் இரு கரையிலும் தொட்டபடி வெள்ளம் ஓடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகமாக நீர் வரத்து இருப்பதனால் ஒகேனக்கல்லில் அமைந்திருக்கும் தொங்கும் பாலம் நடைபாதை வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் மற்றும் மீனவர்கள் பரிசல் இயக்குபவர்கள் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளனர்.மேலும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க வருவாய்த்துறையினர், வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K