என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்!

0
215
I am responsible for my friend's death! The teenager who cut his neck!
I am responsible for my friend's death! The teenager who cut his neck!

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் திருமால்.இவருடைய மகன் சீனிவாசன்(20).இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றார்.அதே பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் பிரபு(20).இவர் செஞ்சியில் தபால் சர்வீஸ் வேலை பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் சீனிவாசன் மற்றும் பிரபுவும் நண்பர்களாக உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து மற்றொரு நண்பரின் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த பைக்கை பிரபு இயக்க பின்புறம் சீனிவாசன் அமர்ந்து வந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி ரியல் எஸ்டேட் விளம்பர பலகையின் மீது மோதியது.அதில் பின்னால் அமர்ந்து வந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பிரபு சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார்.

அதனையடுத்து இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தகவல் அறிந்த சீனிவாசனின் பெற்றோர் கதறி அழுதனர்.

காயங்கள் ஏற்பட்ட பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னுடைய நண்பரின் உயிரிழப்புக்கு தான் காரணமாகி விட்டதாக நினைத்து மனவேதனையில் இருந்து வந்தார்.இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து அவருடைய கழுத்தில் குத்தி தற்கொலை முயற்சி செய்தார்.

அங்கு சிகிச்சைக்கு வந்த சிலர் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் மேலும் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் பிரபு கஞ்சா போதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleமீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! எப்போது வானிலை ஆய்வு மையம் தகவல்!
Next articleநீ எங்கு போனாலும் விட மாட்டேன்! அதை கேட்டு நடு ரோட்டில் இளைஞரை துரத்திய திருநங்கை!