என்னால் தொடக்க வீரராக கூட களமிறங்க முடியும்

Photo of author

By Parthipan K

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் தலைமுறையில் ஷுப்மான் கில் சிறந்த வீரராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இதனால் கேகேஆர் அணி ஷுப்மான் கில்லை ஏலம் ஏலம் எடுத்தது. இந்நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் வாய்ப்பு கிடைத்தால், களம் இறங்க தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தொடக்க வீரராக களம் இறங்குவேன்.
நான் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது அந்த சூழ்நிலையில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் மனதில் இருக்கும். அதனால் பேட்டிங் செய்ய வரும்போது இப்படி செயல்பட வேண்டும் என்று நினைப்பதில்லை. என்னுடைய மனதில் எந்த அணியில் விளையாடினாலும், அணிக்காக போட்டியை ஜெயித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இருக்கும் என்று கூறினார்.