என்னால் அடுத்த ஆஷஸ் தொடரிலும் விளையாட முடியும்

0
190

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி பெரும்பாலான நேரங்களில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 600 விக்கெட் எடுத்து  புதிய சாதனையை படைத்தார். வேகப்பந்து வீச்சாளர்களில் இவர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டினர். தனது  600 விக்கெட் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி ஆவார். இந்த சாதனையை குறித்து ஆண்டர்சன் பேசும்போது நான் இன்னும் டெஸ்ட் போட்டியில் நிறைய காலம் விளையாட வேண்டும் மேலும் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் அடுத்த ஆஷஸ் தொடரிலும் விளையாடுவேன். என்னால் 700 விக்கெட்டுகளை கூட வீழ்த்த முடியும் என்று கூறினார்.

Previous articleபுதிய மைல் கல்லை எட்டிய ஆல்-ரவுண்டர் டுவெய்ன் பிராவோ
Next articleதமிழக மக்களுக்கு உற்சாக ட்விட் போட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here