இவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!!

0
122
I have become a huge fan of him!! A famous actor who praised Samuthirakani!!
I have become a huge fan of him!! A famous actor who praised Samuthirakani!!

இவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து  தள்ளிய பிரபல நடிகர்!! 

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் வினோதய சித்தம். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படமானது விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றதால் தற்போது இந்த படம் ப்ரோ என்ற பெயரில் தெலுங்கில் சமுத்திரக்கனியால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடித்துள்ளனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது தயாராகியுள்ள இந்த படமானது வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் விழாவானது நடைபெற்றது. அதில் நடிகர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார்.

அதில் அவர் கூறியதாவது,

ப்ரோ நிகழ்ச்சிக்கு வந்த குடும்பத்தினருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த கதையை கேட்டதிலிருந்து சமுத்திரகனியின் தீவிர ரசிகனாகி விட்டேன். தெலுங்கு மொழியின் மீது நமக்கு பிடிப்பு மிகவும் குறைவு. அதில் ஆங்கிலம் கலந்தே பேசுவோம்.

எனக்கு தெலுங்கில் பத்து வாக்கியம் கூட பேச வராது. இடையில் நான்கு ஆங்கில வாக்கியங்கள் பேசுவேன். அதை இனிமேல் சரி செய்து கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் சமுத்திரக்கனி நமது மொழியும் இல்லை. முதல் நாளை ஸ்கிரிப்ட் ரீடிங் க்கு போனார். தெலுங்கை கற்றுக்கொண்டார்.

நீங்கள் தெலுங்கை கற்று இவ்வளவு செய்ததால் நான் கட்டாயம் தமிழை கற்று ஒரு நாள் தமிழில் உரை நிகழ்த்துவேன். தமிழ் கற்று திருக்குறள் சொல்ல விரும்புகிறேன். தெலுங்கு மொழியை கற்று எங்கள் கண்களைத் தெரிந்தவர் நீங்கள். தெலுங்கில் நன்றாக கற்றுக் கொண்டீர்கள். நம் தாய் மொழியில் இலக்கியம் மிகவும் வளமானது அது தெரிந்தால் பல சிறந்த திரைப்படங்களை எடுக்கலாம். நம் மொழியில் தேர்ச்சி பெற்று இப்படி ஒரு படத்தை எடுத்த சமுத்திரக்கனிக்கு மிகவும் நன்றி..

தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம்.

எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போது தான், அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்குள் அடைத்து விடும். சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்குப் படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார்.

‘ப்ரோ’ படத்தில் கூட பல மொழிபேசும் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதி விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்’ என்று பவன் கல்யாண் பேசினார்.

தமிழ்ப் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சமீபத்தில் ஒரு புதிய விதியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை குறிப்பிட்டு தான் பவன் கல்யாண் அவ்வாறு கூறினார்.

Previous articleஇந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 
Next article200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!!