கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன் – சங்கக்கரா

0
152

சர்வதேச கிரிக்கெட் கவுன்லின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.  இது தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா அளித்த பேட்டி ஒன்றில் கூறிய போது ‘ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்கிறன் என்றார். மேலும் கிரிக்கெட் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எண்ணம் அவரது மனதில் உண்டு. ஐ.சி.சி. தலைவர் பொறுப்புக்கு வரும் போது சர்வதேச அளவில் முற்றிலும் பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், இந்தியரா, இலங்கை நாட்டவரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரா என்ற எண்ணம் இல்லாமல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.  இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பே கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவை எப்படி வலுப்படுத்தினார் என்பதை அவர் எம்.சி.சி. கமிட்டி உறுப்பினராக இருந்த போது கவனித்துள்ளேன். எனவே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அவர் மிகவும் கச்சிதமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்றால், நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Previous articleஇன்று அப்துல் கலாம் அவர்களின் 5-ஆம் நினைவு நாள்! அவரைப் பற்றிய சில தகவல்கள்!
Next articleதேர்தலில் களமிறங்கும் முதல்வர் வேட்பாளரா அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்? – விவசாயியா? யார் இவர்?