“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’.

Photo of author

By Kowsalya

“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’.

தங்கை பிறந்ததால் தங்கை மீது அதிக பாசம் கொண்ட பெற்றோர்கள் என் மீது பாசம் செலுத்தவில்லை என 5 வயது கொண்ட சிறுமி 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு கொன்ற சம்பவம் ஆந்திராவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் ஹேமஸ்ரீ 11 மாத குழந்தை. நிர்மலா 5 வயது சிறுமி.

ஹேமஸ்ரீ பிறந்தவுடன் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் காவியா இரண்டாவது குழந்தையின் மீது அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். இது நிர்மலாவிற்கு தனது தங்கை மீது அதிக பாசம் கொண்ட பெற்றோர்கள் தன் மீது அதிக பாசம் செலுத்தவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவியா 11 மாத குழந்தையான ஹேமஸ்ரீயை பக்கத்து வீட்டில் தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு ஹேமஸ்ரீயை காணவில்லை. எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

அனைத்து இடத்திலும் தேடிவிட்டு மேலே உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். தகவலறிந்த போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் பொழுது ஹேமஸ்ரீயின் அக்காவான நிர்மலாவை விசாரித்த பொழுது தான் உண்மை தெளிவாகியுள்ளது.

அப்பொழுது நிர்மலா ‘தன் தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததால் அது பிடிக்கவில்லை என்பதால் தனது தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டேன்’ என்று அப்பாவியாக கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், சிறுமி நிர்மலாவின் மீது  வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.