தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நிறுவனருமான சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களுடைய இந்த அறிவிப்பு மகராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1991ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் உருவாக்கினார். கட்சியை உருவாக்கியதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். மேலும் 6 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த பின்னர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், சர்வதேச கிரிகெட் கவுன்சிலின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது 63 கால அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் இனிமேல் தேர்தலில் போட்டியிடப்போவதும் இல்லை என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பை தலைவர் சரத் பவார் திரும்பப் பெற வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.