என்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!!

0
79
I want to do my best to help this community !! Emotional talk of a famous actress !!
I want to do my best to help this community !! Emotional talk of a famous actress !!

என்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!!

பூஜா ஹெக்டே என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் உருவான நடிகர் ஜீவா உடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். மேலும் இவர் 2012 இல் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 9 வருடங்களில் 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இவர் மகாராஷ்டிராவில் மும்பையில் துலு பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவர் பெற்றோர் மஞ்சுநாத் ஹெக்டே மற்றும் லதா ஹெக்டே ஆவார். இவர்கள் கனடாவில் உடுப்பி நகரை சேர்ந்தவர். அவர் சகோதரன் ரிஷப் ஹெக்டே உள்ளார். மேலும் இவர் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, துளு மற்றும் தமிழ் மொழிகளை சரளமாக பேசுவார். இவர் நடனம் மற்றும் பேஷன் ஷோக்களில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவர் சமூக சேவை செய்வதில் ஆர்வமாக உள்ளார். மேலும் இந்த சமூகம் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. எனது வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை உண்டாக்கி உள்ளது. அதற்கு நான் திரும்பி செய்ய வேண்டிய பல செயல்கள் உள்ளது.

அதனால் நான் தற்பொழுது புதிதாக ஒரு தொண்டு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இது என்னால் முடிந்த சிறிய அளவு அல்லது பெரிய அளவு சமூகத்திற்கு முடிந்த உதவிகளை நான் புதிதாக துவங்கியுள்ள தொண்டு நிறுவனத்தின் மூலம் செய்ய உள்ளேன். மேலும் எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அன்பு என்பது சக்திவாய்ந்த உணர்ச்சி. எனவே அன்பால் செய்யும் எந்த சேவையாக இருந்தாலும் இந்த உலகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வர காரணமாக இருக்கும். மேலும் பொருளாதார வளர்ச்சியின் கீழ் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் எனது புதிய தொண்டு நிறுவனம் செய்யும். என்று நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார் மேலும் இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சி பூர்வ சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.