நானும் இவரை போன்று விளையாட ஆசைபடுகிறேன்

Photo of author

By Parthipan K

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் மில்லர் மிடில் ஆர்டரில் களமிறங்க கூடிய இவர் இருபது ஓவர் போட்டியில் 35 பந்துகளுக்கு சதத்தை விளாசி அனைவரின் பார்வையும் இவருடைய பக்கம் திரும்ப வைத்தார். இவர் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் கடந்த எட்டு வருடங்களாக விளையாடி வருகிறார். அவர் அந்த எட்டு வருடங்களுமே பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
ஆனால் இந்த முறை எல்லா அணிகளிலும் வீரர்கள் மாறியுள்ளனர் அந்த வகையில் மில்லர் இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். மேலும் அவர் பேசும்போது டோனியை போன்றே நானும் விளையாட ஆசைபடுகிறேன் அவரின் பினிசிங் ஸ்டைல்  எனக்கு ரொம்ப பிடிக்கும் அது போலவே நானும் சிறந்த பினிஷராக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.