எனக்கும் ரோகித் சர்மா போலவே விளையாட ஆசை

Photo of author

By Parthipan K

டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நபர் என்ற சாதனையைப் படைத்தவர் கவாஸ்கர்.  இவர் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் எடுப்பார். தடுப்பாட்டத்தில் வல்லவர். இந்நிலையிலும் நானும் ரோகித் சர்மா போன்று அதிரடியாக விளையாட விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ஸ்டைலை பார்க்கும்போது, முதல் ஓவரில் இருந்தே டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாட முடியும். நானும் அதுபோன்று விளையாட விரும்பினேன். சூழ்நிலை மற்றும் என்னுடைய திறமையின் மீதான நம்பிக்கை குறைவு என்னை அப்படி விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால், அடுத்த தலைமுறை பேட்ஸ்மேன்கள் அதை செய்வதை நான் பார்க்கும்போது, நான் அந்த ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறேன் என்று கூறினார்.