இந்த செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன்

0
139
சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரரான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேத்தனின் உடல்நிலை மோசமடைந்து உள்ளது என அவருக்கு நெருங்கிய வட்டாரம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோல தற்போது பி.சி.சி.ஐ. தலைவராக பொறுப்பேற்றுள்ள சவுரவ் கங்குலி இந்த செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.  இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக அவர் இருந்தபொழுது, அவருடன் நிறைய நேரம் செலவிட்டுள்ளேன் என்று அவர் கூறினார்.
Previous articleஇன்று (17.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?
Next article3 வயது குழந்தையின் மேல் விழுந்த டிவி! சார்ஜில் இருந்த செல் போனை எடுக்க முயன்றதால் குழந்தை பலி!