அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்… – கலா மாஸ்டர் ஓபன் டாக்!

0
147
#image_title

அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்… – கலா மாஸ்டர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் கலா மாஸ்டர். இவர் ரஜினி, கமல் முதல் பாலிவுட், டோலிவுட் என அனைத்து நடிகர், நடிகைகளை “ஆட்டுவித்தவர்”. இவருடைய அக்கா கிரிஜா. இவரும் நடன கலைஞர்தான். இவருடைய கணவர்தான் ரகுராம். இவரும் நடன இயக்குநராவார். இவர் மூலம் தான் கலாவும் பிருந்தாவும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தனர்.

 

பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு, டான்ஸ் மாஸ்டர் ரகுராமிடம் பணியாற்றினார். இவருடய ஆதரவால்தான் தமிழ் சினிமாவில் கலா மாஸ்டர் நுழைந்தார். இன்று இந்திய அளவில் சிறந்த நடன இயக்குநர் என்ற விருதும் பெற்றுள்ளார்.

 

ஆரம்பத்தில் உதவியாளராக இருந்து வந்த கலா மாஸ்டருக்கு ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் தமிழில் நடன இயக்குநராக அறிமுகமானார். இதன் பிறகு, கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘புதுபுது அர்த்தங்கள்’ படத்தின் நடன இயக்குநராக பணியாற்றினார். கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட பாடல்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் ஒரு சேனலுக்கு கலா மாஸ்டர் பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் பேசுகையில்,

எனக்கு பிடித்த நடன கலைஞர் பானுப்பிரியா. நான் அவரிடம் சில காலம் உதவியாளராக இருந்துள்ளேன். ஒரு தடவை ‘அழகன்’ படத்திற்காக நடனம் அமைக்க சொல்லி இயக்குநர் கே.பாலசந்தர் என்னை அழைத்தார். அங்கு சென்ற நான் அவரிடம் ஒரு டையலாக் பேப்பரை வாங்கினேன். அந்த பேப்பரில் எழுதிய பாடலுக்கு ஏற்றபடி ஜதி அமைக்க வேண்டும் என்று பாலச்சந்தர் கூறிவிட்டார். இதன் பிறகு, அந்தப் பாடலுக்கு ஆட பானுப்ரியா வந்தார். அவரை பார்த்ததும் நான் அப்படியே ஷாக்காகிவிட்டேன். இவர் எப்பேற்பட்ட ஒரு நடன கலைஞர்? இவருக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? என்று தயங்கினேன்.

உடனே பானுப்பிரியா என்னிடம்… பயப்படாதே கலா… நீ சொல்லிக் கொடு… அதேபோல் நான் செய்றேன். நல்லா பண்ணு என்று சொல்லிட்டார். அந்த விஷயம் என் வாழ்க்கை மறக்க முடியாது. முதன் முறையாக நான் பயந்த விஷயம் அது என்று மனம் திறந்து அவர் பேசினார்.

 

Previous articleகடும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனா!!! உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!!!
Next articleஅந்த பக்கம் மட்டும் போகாதீங்க… – பாக். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரமிஸ் ராஜா!