நான் இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடுவேன்

0
117
கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால்  இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது பிசிசிஐ. பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அவரது தடைக்காலம் முடிய இருக்கிறது. இந்நிலையில் இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் மீதமுள்ளது என்று ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார். மேலும் 2021 ஐபிஎல் ஏலத்தில் பெயரை உறுதியாக சேர்ப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Previous articleமீண்டும் சென்னை அணியில் இணைந்த முக்கிய வீரர்
Next articleகடைசி போட்டியில் மட்டும் என்னை சேர்ப்பதா? முன்னாள் கேப்டன் ஆதங்கம்