ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்!

Photo of author

By Gayathri

ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்!

Gayathri

ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்!

ஐசிசி வெளியிட்ட ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றம் வீராங்கனைகளுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில், ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 3-வது முறையாக பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இவரையடுத்து,  ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அயர்லாந்தை சேர்ந்த அர்லீன் கெல்லி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.