அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!

0
94
#image_title

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!

பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நான் அரசியலில் இருந்து விலகினால் விவசாயத்தில் இறங்கி நான் வேலை செய்வேன் என்று கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் உள்ள மக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூரில் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அவர்கள் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் நான் அரசியலில் யாருடைய கட்டாயத்துடனும் இருக்க வில்லை. அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் செய்வேன்” என்று பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை அவர்கள் “நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்குள் வரும் பொழுது தூய்மையான அரசியல் என்ற எண்ணத்துடன் வந்தேன். ஆனால் 100 சதவீதம் இருக்கும் அரசியலில் 30 சதவீதம் மட்டுமே நேர்மறையான எண்ணங்கள் இருக்கின்றது. மீதம் 70 சதவீதம் எதிர்மறையான எண்ணங்களே இருக்கின்றது.

தற்பொழுது நான் அரசியலில் யாருடைய கட்டாயத்தில் பேரிலும் இல்லை. இருக்க வேண்டும் என்பதற்காக தான் நான் அரசியலில் இருக்கின்றேன். அரசியலில் இருந்து நான் விலகிவிட்டால் தோட்டத்திற்கு சென்று விவசாயம் பார்ப்பேன்” என்று சிங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரியா அவர்கள் பேசுவது போல பேசினார். அதாவது சிங்கம் படத்தில் நடிகர் சூரியா அவர்களுக்கு “போலீஸ் வேலையில் இருந்து போனால் 50000 இருந்தால் மளிகை கடை வைப்பேன் என்று நீண்ட டயலாக் பேசுவார். அது போல அண்ணாமலை அவர்கள் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை அவர்கள் “தூய்மையான அரசியலுக்கு மக்களாகிய நீங்கள் தான் முதலில் மாற வேண்டும். நீங்கள் மாறினால் அரசியல்வாதிகளும் மாறிவிடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு சில கட்டளைகளை பிறப்பித்துள்ளார். அதாவது அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் சில பணிகளை நாம் செய்ய வேண்டும்

அக்டோபர் 1ம் தேதியான இன்று நாம் ஒரு மணி நேரம் தூய்மை பணிகளை செய்ய வேண்டும். இன்றும்(அக்டோபர்1) நாளையும்(அக்டோபர்2) நாம் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். கதர் ஆடைகளை வாங்கி நாம் உடுத்த வேண்டும்.

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 7 மாதங்கள் முழுமையாக உள்ளது. கூட்டணி மற்றும் இன்னும் பிற தேர்தல் விவரங்களை தேசியத் தலைவர்கள் அறிவிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். என்னுடைய நீக்கம் பாஜக கட்சியை வலிமைப்படுத்துவது ஆகும்.

இந்திய மாநிலங்களில் தமிழகம் முக்கிய மாநிலமாக விளங்குகின்றது. ஆகவே தமிழகத்தில் பாஜக கட்சியை மேலும் வலுப்படுத்துவது என்னுடைய முக்கிய நோக்கமாகும்” என்று அண்ணாமலை அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.