பாரதம் என மாற்றினால் பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

0
105
If it is changed to Bharat then Pakistan will claim it!! Shocking information that came out!!
If it is changed to Bharat then Pakistan will claim it!! Shocking information that came out!!

பாரதம் என மாற்றினால் பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

பாரதம் என இந்தியாவின் பெயரை மாற்றினால் இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வரும் தகவலில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு மத்தியில்  ஆளும் பாரதிய ஜனதா கட்சி தீவிரமான முடிவுகளை எடுத்து வருகிறது. இதற்கு முன்னோடியாக ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்காக தயாரிக்கப்பட்ட விருந்து அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகள் இந்தியா என தனது கட்சியின் பெயரை அறிவித்ததால் தான் பாரதிய ஜனதா இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சித்து வருவதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

அதன் அலை ஓய்வதற்குள் அடுத்ததாக இந்த சர்ச்சையில் புதிய பிரச்சனை ஒன்று எல்லை தாண்டி ஆரம்பித்துள்ளது. அதாவது நமது அண்டை நாடான பாகிஸ்தான்  நாட்டின்   உள்ளூரில் உள்ள ஊடகம் ஒன்று இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றினால பாகிஸ்தான் அந்தப் பெயரை உரிமை கொண்டாடலாம் எனக் கூறியிருப்பதாக ட்விட்டர் தளத்தில் தகவல் பதிவிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு உள்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், பெயரை மாற்றினால் இந்தியா பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் பாகிஸ்தானில் உள்ள இந்துஸ் மாகாணம் என அடையாளப்படுத்தும் விதமாக இந்தியா என்ற பெயரில் பாகிஸ்தான் உரிமை கோருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக இந்த பதிவை ஆதரிப்போர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து பாரதம் என இந்தியாவின் பெயரை மாற்றுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரும் என்ற அளவிற்கு இந்த விவாதம் சென்றுள்ளது.

Previous articleஎன்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை!
Next articleயுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது மிகவும் சுலபம்!! முழு விவரம் இதோ!