நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் முடிந்தது..!! காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதமப்ரம் பேச்சு..!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செய்த பிரச்சாரத்தில் நரேந்திர. மோடி அவர்கள் 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
இந்தியா முழுவதும் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அளவில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது மத்திய அரசையும், பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ப.சிதம்பரம் அவர்கள் “பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கை வெறும் 14 நாட்களில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கையை மோடியின் வாக்குறுதிகள் என்றே கூறுகின்றனர்.
பாஜக கட்சி தற்பொழுது கட்சியாக இல்லை. பாஜக கட்சி தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடியை வழிபடும் ஒரு வழிபாட்டு முறையாக மாறிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதிகள் அனைத்தும் எனக்கு தலைவர்களை வழிபடும் நாடுகள் எப்படி இருக்கும் என்பதை நினைவுபடுத்துகின்றது. இந்தியாவில் தலைவர்களை வழிபடும் முறையானது சர்வாதிகாரத்திற்கு வழிவகை செய்யும்.
பத்தாண்டுகள் நடைபெற்ற பிரதமர். நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மட்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் அரசியல் சாசனத்தையே மாற்றி அமைத்துவிடுவார். ஆகவே நாம் நம்முடைய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.
இந்தியா தற்பொழுது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை மிகப் பெரிய சவால் என்னவென்றால் வேலையில்லா திண்டாட்டம் தான். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வேலை உருவாக்கம் மற்றும் சொத்து உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. தற்பொழுதைய தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்று அவர் பேசினார்.