மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் !! மாலத்தீவு அதிபர் மொய்சு அமோக வெற்றி..!!

0
123
Parliamentary elections held in Malaysia
Parliamentary elections held in Malaysia

மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்! மாலத்தீவு அதிபர் மொய்சு அமோக வெற்றி..!!

மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தற்பொழுது மாலத்தீவு அதிபராக இருக்கும் மொய்சு அவர்களின் தலைமையிலான பிஎன்சி கட்சி 60 இடங்களில் வெற்றி வெற்றி பெற்று பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. 

மலேசியா நாட்டில் நேற்று(ஏப்ரல்21) பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று அன்றே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் 284663 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 104826 ஆண்களும், 102867 பெண்களும் தங்கள் வாக்குகளை விருப்பமான கட்சிக்கு செலுத்தினர். தேர்தலின் முடிவில் 72.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 

மலேசியா பாராளுமன்றத் தேர்தலில் உள்ள 93 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு 368 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 130 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மாலத்தீவு அதிபராக இருக்கும் மொய்சு தலைமையிலான பிஎன்சி கட்சி 90 தொகுதிகளிலும் போட்டியிட்டது. எதிர்கட்சிகளில் முக்கியமான எதிர்காட்சியாக விளங்கும் மாலத்தீவு ஜனநாயக கட்சி 89 இடங்களில் போட்டியிட்டது. 

வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மொய்சு தலைமையிலான பிஎன்சி கட்சி ஆரம்பம் முதலே முன்னணி வகித்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிபர் மொய்சு தலைமையிலான பிஎன்சி கட்சி 60 தொகுதிகளில் வென்று சூப்பர் மெஜாரிட்டியை பெற்று பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. 

பிஎன்சி கட்சியை எதிர்த்து போட்டியிட்ட மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் 10 இடங்களில் சுயேட்சையாக களம் கண்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பிஎன்சி கட்சி சார்பாக களமிறங்கிய மூன்று பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மாலத்தீவு ஜனநாயக கட்சி 64 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. அப்பொழுது பிஎன்சி மற்றும் பிபிஎம் கூட்டணி கட்சி வெறும் 8 இடங்களை பிடித்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.