இவர் மட்டும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் : சுரேஷ் ரெய்னா

Photo of author

By Parthipan K

இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தி்ல் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய இந்தியா வெளியேறியது. உலக கோப்பைக்கான அணியை  தயார்படுத்தப்படும்போது அம்பதி ராயுடுவை மிடில் ஆர்டர் வரிசையில் இறக்க முடிவு எடுக்கப்பட்டது. அவருக்கு ஏராளமான போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் இந்தியா  அணியில் இருந்து நீக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த  விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
அந்த நேரத்தில் இந்தசெயல்  கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தசுழ்நிலையில் அம்பதி ராயுடு மட்டும் அணியில் இருந்திருந்தால் உலக கோப்பையை இந்தியா வெற்றிபெற்றிற்கும் என்று  சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறி்தது சுரேஷ் ரெய்னா கூறுகையில் அணியில் அம்பதி ராயுடுவை நான்காவது இடத்தில்  இறங்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.ஏனெனில், அவர் அதற்காக கடுமையாக உழைத்திருந்தார். அதற்காக ஒன்றரை ஆண்டுகள் அணியில் இடம்பிடித்து விளையாடினார். சிறப்பாக ஆடியபோதும்  அணியில் இடம் கிடைக்கவில்லை. கதந்த  2018-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் எனக்கு மகிழ்ச்சிகரமாக இல்லை.ஏனெனில்  , அம்பதி ராயுடன் உடற்தகுதி டெஸ்டில் தோல்வியடைந்தார். அவர் தோல்வியடைந்ததை நான் தேர்வாகி சிறந்ததாக நான் உணரவில்லை.

நான்காவது  இடத்திற்கு அவர் சிறந்தவர். அவர் மட்டும் அணியில் இருந்துதல், இந்திய அணி உலக கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடிய வகையில் சிறந்த தேர்வாக இருந்திருப்பார். சென்னையில் நடைபெற்ற முகாமில் அவர் நன்றாக பேட்டிங் செய்தார்’’ என்றார் கூறினார்.