பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?   

0
192
If passengers do not follow this we will drop you off the plane! Do you know what the restrictions are?
If passengers do not follow this we will drop you off the plane! Do you know what the restrictions are?

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை மக்களை பாதித்து தான் வருகிறது.இதகென்று ஓர் முடிவு தற்போது வரை இல்லை.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் பல வழிகாட்டு நடைமுறைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் தொற்று முற்றிலும் அகன்ற பாடில்லை.தற்போது தான் தமிழகத்தில் மூன்று அலைகள் கடந்து நடைமுறை வாழ்க்கை ஆரம்பித்துள்ளனர்.இந்த வேளையில் நான்காவது அலை தொங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த நான்காவது அலை மக்களை பெருமளவு பாதிக்காமல் இருக்க இப்போதிருந்தே பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி  வருகின்றனர்.

அந்தவகையில் அனைத்து மாவட்ட ஆட்சியரும் தங்களின் மாவட்டத்தின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.அதனையடுத்து விமான நிலையங்களில் சரியான கட்டுப்பாட்டு வழிமுறைகள் கடைபிடிப்பது கிடையாது என பல புகார்கள் எழுந்து வந்தது.அதனைத்தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி, உயர்நீதிமன்றம் விமான போக்குவரத்து இயக்குனரகம் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.உயர்நீதிமன்றத்தின் ஆணை படி விமான போக்குவரத்து இயக்குனரகம் கட்டுப்பாட்டு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பது,விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என கூறியுள்ளனர்.

விமானத்தில் பயணம் முடியும் வரை பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.பயணிகளின் மருத்துவ காரணம் அல்லது சூழ்நிலையின் பேரில் முகக்கவசம் அணிவதை தவிர்த்து கொள்ளலாம்.பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது ஊழியர்கள்,பயணிகளிடம் முகக்கவசம் அணிவதை அறிவுறுத்த வேண்டும்.மேற்படி பலமுறை கூறியும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தவிர்க்கும் பயணிகளை விமானம் புறப்படும் முன் கீழே இறக்கிவிடுங்கள் என்று கூறியுள்ளனர். அதனால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் கூறும் வழிமுறைகளை ஏற்று நடக்க வேண்டும்.

Previous articleஉலகலாவிய நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்தது!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் கவனம் தேவை