இந்த திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு இதை வைத்து வழிபட்டால் வாழ்வில் நற்பலன்கள் கிடைக்கும்!!
சந்திரனின் நகர்வை பொறுத்து இந்த உலகத்தில் திதிகள் காணப்படுகின்றன. அதன்படி ஒரு மாதத்தில் 14 நாட்களில் வளர்பிறை திதியும், 14 நாட்கள் தேய்பிறை திதிகளும் ஏற்படுகிறது. இந்த 28 நாட்கள் போக மீதம் இருக்கும் 2 நாட்கள் அமாவாசை, பௌர்ணமி ஆக இருக்கிறது.
இவ்வாறு மாறி வரும் திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு எந்த பொருளை வைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
*பிரதமை அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “நெய்” படைத்து வழிபட வேண்டும்.
*துவிதியை அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “சர்க்கரை” படைத்து வழிபட வேண்டும்.
*திருதியை அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “பால்” படைத்து வழிபட வேண்டும்.
*சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “பட்சணம்” படைத்து வழிபட வேண்டும்.
*பஞ்சமி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “வாழைப்பழம்” படைத்து வழிபட வேண்டும்.
*சஷ்டி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “தேன்” படைத்து வழிபட வேண்டும்.
*சப்தமி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “வெல்லம்” படைத்து வழிபட வேண்டும்.
*அஷ்டமி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “தேங்காய்” படைத்து வழிபட வேண்டும்.
*நவமி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “நெற்பொறி” படைத்து வழிபட வேண்டும்.
*தசமி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “கருப்பு எள்” படைத்து வழிபட வேண்டும்.
*ஏகாதசி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “தயிர்” படைத்து வழிபட வேண்டும்.
*துவாதசி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “அவல்” படைத்து வழிபட வேண்டும்.
*திரியோதசி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “கடலை” படைத்து வழிபட வேண்டும்.
*சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “சத்துமாவு” படைத்து வழிபட வேண்டும்.
*பவுர்ணமி மற்றும் அமாவாசை அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு “பாயசம்” படைத்து வழிபட வேண்டும்.