ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!! அண்ணாமலை அதிரடி!! 

Photo of author

By Amutha

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!! அண்ணாமலை அதிரடி!! 

Amutha

If Stalin goes here it will be a struggle!! Annamalai action!!

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!!  அண்ணாமலை அதிரடி!! 

முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக மாநிலத்திற்கு சென்றால் அவருக்கு எதிராக அங்கு போராட்டம் நடக்கும். அவருக்கு “கோ பேக்” தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில்  கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எந்தவித அரசியலும் செய்யவில்லை. காரணம் கர்நாடக காவிரி நீரை நமக்கு முறையாக தந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டப்படும் பொது அந்த அணை நீரின் மூலம் சிவக்குமாரின் தொகுதியானது அதிக நன்மை பெறும். காங்கிரசையோ, டி.கே. சிவக்குமாரையோ முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டிக்க மனமில்லை.

கர்நாடகாவிற்கு முதலமைச்சர் செல்ல முயற்சி செய்தால் ஸ்டாலினுக்கு எதிராக கடுமையாக போராட்டம் நடத்துவோம். மேகதாது விவகாரம் தற்போது பெரிதாகியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவிற்கு சென்றால் போராட்டம் நடத்தப்படும். அங்கு அவர் நுழைந்தால் கோ பேக் சொல்வோம்.

தமிழககத்தின் உரிமைகள் பல்வேறு சூழ்நிலைகளில் மறுக்கப்பட்டுள்ளன. அதேபோல முல்லை பெரியாறு விவகாரத்திலும் , மேகதாதுவை போலவே தமிழக உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.