இந்த ஐந்து உணவுகள் தவறாமல் எடுத்தால் பல நோய்கள் பறந்து விடும்! பி- காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ள உணவு வகைகள்!

0
170

இந்த ஐந்து உணவுகள் தவறாமல் எடுத்தால் பல நோய்கள் பறந்து விடும்! பி- காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ள உணவு வகைகள்! 

 

நமது உடலில் தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஆக்கம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டுக்கும் காரணமாக அமைவது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ். அதாவது தசை மற்றும் நரம்பு உருவாவது, செயல்பாடு ஆகிய இரண்டுக்கும் முக்கிய பங்கு வகிப்பது பி காம்ப்ளக்ஸ். அதேபோல் இனப்பெருக்க செயல்பாடுகளில் முக்கியமானது பி காம்ப்ளக்ஸ். ஒரு கரு வளரும்போது எந்தவித பிறவி குறைபாடும் இல்லாமல் வளர பி காம்ப்ளக்ஸ் உதவுகிறது.

இதைப்போல் பலவித செயல்பாடுகளுக்கும் பி காம்ப்ளக்ஸ் உதவுகிறது. ஆனால் நாம் அறியாமையால் அந்த வகை உணவுகளை தவிர்த்து விடுகிறோம். பி காம்ப்ளக்ஸ் மொத்தம் எட்டு விதமான வைட்டமின்கள் சேர்ந்த கலவையாகும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்தினை மாத்திரை மூலம் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் முக்கியமான ஐந்து உணவுகளில் பெறும் வழிமுறைகளை பார்ப்போம். இதை வாரத்தில் மூன்று நாட்கள் விட்டு விட்டு எடுத்துக் கொள்ள பி காம்ப்ளக்ஸ் குறைவின் காரணமாக ஏற்படும் குறைபாட்டு நோய்கள் சரியாகும்.

1. மீன்:
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருக்கும் உணவுகளில் முதலிடம் பிடிப்பது மீன் வகைகள். அதிலும் சால்மோன் மீன் வகைகளில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. பிற நன்னீர் மற்றும் கடல்நீர் மீன் வகைகளிலும் குறிப்பிடத்தக்க பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் உள்ளன. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்ற அசைவ உணவுகளை விட மீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு தேவையான பி-காம்ப்ளக்ஸ் சத்துக்கள் கிடைக்கின்றன.

2. முட்டை:
ஒரு முட்டையில் இருக்கக்கூடிய பி காம்ப்ளக்ஸ் அளவு 9% முதல் 15% வரை நமக்கு கிடைக்கிறது.

3. பால்:
ஒரு முக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவு. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பால் அருந்தலாம். தினமும் எடுத்துக் கொள்வது பிரச்சனை இல்லை. உடல் எடை அதிகரிக்கும் என்பவர்கள் மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். பாலில் 7% முதல் 18% பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் உள்ளன. பாலானது பாக்கெட் பாலாக இல்லாமல் நேரடியாக கறந்த பாலில் மட்டுமே இத்தகைய சத்துக்கள் கிடைக்கும்.

4. கீரை வகைகள்:
கீரை வகைகளை நாம் அதிகம் சேர்த்துக் கொள்வதால் நமக்கு இரண்டு வகையான பலன்கள் கிடைக்கும்.  பி-காம்ப்ளக்ஸ் சத்துக்கள் கிடைப்பதோடு அதிக இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்கும். சிறுகீரை மற்றும் பசலைக் கீரையில் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த வகையான கீரைகளை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் வெந்தயக் கீரையை சேர்த்துக் கொள்வதும் நல்லது.

5. விதை உணவுகள்:
தட்டைப்பயிறு, ராஜ்மா, பச்சை பட்டாணி, போன்ற பயறு வகைகளில் ஐந்து முதல் 45 சதவீதம் வரை பி-காம்ப்ளக்ஸ் சத்துக்கள் உள்ளன. இவைகளை எடுத்துக் கொண்டாலே ஒரு நாளிற்கான பி-காம்ப்ளக்ஸ் சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதோடு மேற்கண்ட உணவு வகைகளை கூடுதலாக சாப்பிட்டு வந்தாலே நமக்கு தேவையான பி- காம்ப்ளக்ஸ் சத்துக்கள் முழுமையாக கிடைத்து விடும்.

Previous articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள்!!
Next articleஅற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?