இத்தனை ஆண்டு பணியில் இருந்தால் பர்மனென்ட் செய்யப்படுவார்கள்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

இத்தனை ஆண்டு பணியில் இருந்தால் பர்மனென்ட் செய்யப்படுவார்கள்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!

புதுச்சேரி சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா ஜனதா எம்எல்ஏ கல்யாண சுந்தரம் கூறுகையில் அண்மையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தினக் கூலி  ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்கள் மாடியில் ஏறி தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்ததின் காரணமாக பணி நிரந்தரம் கிடைத்தது. மேலும் சொசைட்டி கல்லூரிகள் பொதுப்பணித்துறையிலும் ஆயிரக்கணக்கானோர்  நிரந்தரமற்ற வேலையில் இருக்கின்றனர்.

இவர்கள் நாங்களும் மாடியில் இருந்து  குதிக்க வேண்டுமா என கேட்கின்றனர். அவர்களுக்கும் பணி நிரந்தரம்  குறித்து முதலமைச்சர் சபையில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர் கேட்டதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி எதையும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அனைத்து துறைகளிலும் மணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியவர்கள் உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை பணி நிரந்தரம்  செய்ய வேண்டியது நம் கடமை.

அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் பணியாற்றினார் என்ற அடிப்படையில் பணி நிரந்தரம் செய்துள்ளோம். பொது பணித்துறையில் 1100 பேரை ஒரே நேரத்தில் பணியில் நிரந்தரம்  செய்துள்ளோம். அதனால் இந்த ஊழியர்கள் மீது அக்கறை உள்ளது ஐந்தாயிரம் ரூபாய், 6 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு பணி பாதுகாப்பில்லாமல் வேலையில் உள்ளனர்.

இந்த துறையில் காலிபணியிடம் ஏற்படும் போது கவனத்தில் கொண்டு அவர்கள் பணியில் நிரந்தரம்  செய்யப்படுவார்கள். பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ளவர்கள் படிப்படியாக பணியில் நிரந்தரம் செய்யப்படுவார்கள் அந்த துறைகளில் வாய்ப்பு ஏற்படுத்தும் போது பணி நிரந்தரம் செய்வோம் என தெரிவித்தார்.