இந்த பரிகாரம் செய்தால் 5 வாரத்தில் திருமணம் நடக்கும்..!

Photo of author

By Divya

இந்த பரிகாரம் செய்தால் 5 வாரத்தில் திருமணம் நடக்கும்..!

நவீன கால கட்டத்தில் திருமணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சிலருக்கு திருமண பொருத்தம் கூடி வராது… சிலருக்கு தோசங்கள் இருக்கும்… இவ்வாறு பலக் காரணங்களால் திருமண தடை ஏற்படும்.

திருமணம் உரிய வயதில் நடைபெற்று விட வேண்டும். தடை பட்டு போனாலோ… தள்ளி தள்ளிப் போனாலோ அது நன்றாக இருக்காது. இவ்வாறு திருமணம் கைகூடாமல் உள்ள ஆண், பெண்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வந்தால் விரைவில் உங்கள் வீட்டில் கெட்டி மேளம் சத்தம் கேட்பது உறுதி.

திருமணமாகாத பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்…

ஒரு கைப்பிடி அளவு மருதாணியை வியாழன் அன்று பறித்து வந்து வீட்டில் உள்ள எச்சில் படாத செம்பில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு பூஜை அறையில் வைத்து விடவும்.

மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விட்டு மருதாணி செம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு செல்லவும். அங்கு அம்மனுக்கு இந்த மருதாணி இலை தண்ணீரில் அபிஷேகம் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை செய்து வந்தால் நிச்சயம் திருமணத் தடை நீங்கி திருமண யோகம் கிடைக்கும்.

திருமணமாகாத ஆண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்…

வெள்ளிக்கிழமை அன்று அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி இரண்டு திரி போட்டு மருதாணி இலை வைத்து தீபம் ஏற்றவும். இவ்வாறு தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை செய்து வந்தால் நிச்சயம் திருமணத் தடை நீங்கி திருமண யோகம் கிடைக்கும்.