கேள்வி கேட்டால் இப்படித்தான் அடிப்போம்.. கோவை தொகுதியில் தொடரும் சர்ச்சை!! அண்ணாமலை மீது கைது நடவடிக்கை?
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவடைந்த நிலையில் இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிவாகை சூட முடியுமா என்ற பெரும் கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது.அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பொழுது பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தது.
தற்பொழுது அது இல்லாத காரணத்தினால் பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துவிட்டால் இருக்கும் இடம் காணாமல் போய்விடும் என்ற காரணத்தினாலேயே அண்ணாமலை கோவை தொகுதியில் மும்முரம் காட்டி வருகிறார்.
பிரச்சாரம் என்றாலே அதற்குரிய நிபந்தனைகளுடன் அனைத்து கட்சிகளும் செயல்பட வேண்டும் ஆனால் அண்ணாமலையோ அந்த நிபந்தனைகளை மீறி பிரச்சாரம் செய்து வருகிறார்.குறிப்பாக 10 மணிக்கு மேல் யாரும் பரப்புரை செய்யக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது.ஆனால் அண்ணாமலை இதனை மீறி செயல்பட்டு வருவதால் தற்பொழுது அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இவருக்கு யார் இவ்வாறான அனுமதி அளித்தது என்று எதிர்த்து கேள்வி எழுப்பிய மற்ற கட்சி நிர்வாகிகளையும் பாஜக-வினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதனால் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.பாஜக வெற்றி பெற செய்யும் நடவடிக்கைக்கள் அனைத்தும் தோல்வியடைந்து வரும் நிலையில் அண்ணாமலையின் இந்த வழக்கானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.