புதிதாக தங்கம் வாங்கினால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நிச்சயம் அடகு கடைக்கு போகாது!!

Photo of author

By Divya

புதிதாக தங்கம் வாங்கினால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நிச்சயம் அடகு கடைக்கு போகாது!!

தீர்வு 01:

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்யும் போது ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில்
வீட்டில் உள்ள எதாவது ஒரு தங்க நகைகளை வைத்து பூக்கள் வைத்து அலங்கரித்து தூப தீபம் காட்டி வழிபடவும்.

ஒரு மணி நேரம் கழித்து அதை எடுத்து நகை வைக்கும் இடத்தில் வைக்கவும். அப்படி வைக்கும் போது 3 கிராம்பு, 3 ஏலக்காய், சிறிது துளசி இலைகளை சேர்த்து வைக்கவும். 2 நாட்களில் துளசி இலைகள் வாடியவுடன் எடுத்து விடவும். கிராம்பு ஏலக்காயை மறு வெள்ளிக்கிழமை அன்று மாத்தி யார் காலும் படாத இடத்தில் போடவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வர தங்கம் வீட்டில் தங்கும்.

தீர்வு 02:

புதிதாக தங்கம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும் போது மஞ்சள் கிழங்கு, குங்குமம், தாமரை அல்லது துளசி வாங்கி நகைகளோடு சேர்த்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அந்த பொருட்கள் அனைத்தையும் பூஜை அறையில் சிறிது நேரம் வைத்து 2 மணி நேரம் கழித்து அதை எடுத்து சிறிது மஞ்சள் தண்ணீர் தெளித்து பீரோவில் வைக்கவும்.

இவ்வாறு செய்யும் பொழுது அந்த மஞ்சள் கிழங்கு, குங்குமம், தாமரை அல்லது துளசி அனைத்தையும் சேர்த்து உள்ளே வைக்கவும். மலர் அல்லது துளசி காய்ந்தவுடன் எடுத்து விடவும்.

பின்பு வெள்ளிக்கிழமை அன்று ஒரு மஞ்சள் துணியில் 5 கிராம்பு, 5 ஏலக்காய், 5 சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைத்து முடிச்சு போட்டு நகை இருக்கும் இடத்தில் வைத்து விடவும்.

இதை மாதம் ஒருமுறை மாற்றி பழையதை கால் படாத இடத்தில் போடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நிச்சயம் தங்கம் தங்கும்.