எலுமிச்சை சாப்பிட்டவுடன் இதை செய்தால் கட்டாயம் உயிருக்கே ஆபத்து! மக்களே ஜாக்கிரதை!
நமது உணவு பழக்க வழக்கங்களில் ஒன்றுடன் மற்றொன்று சேர்த்து உண்ணக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் எலுமிச்சையுடன் சில பொருட்களை நாம் சேர்த்து சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் அயன் மெக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழத்தை உபயோகிக்கலாம். இதனால் புத்துணர்ச்சியை உணர முடியும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் எலுமிச்சை பழச்சாற்றை எடுத்துக் கொள்வதால் அது சீராக கூடும். அஜிரன கோளாறு இருப்பவர்களும் எழுமிச்சியை எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை பழத்தை தினம்தோறும் ஏதேனும் ஒரு முறையில் முகத்திற்கு எடுத்து வந்தால் அது அதிக தீமை விளைவிக்கும். சில திசுக்களை அழித்து சருமத்தை வறட்சியாக்கிவிடும். பலரும் பல் கரையாக உள்ளது என்று எலுமிச்சை பழத்தை உபயோகிப்பர். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பல் கூச்சம் ஏற்படுத்தும். அதேபோல உடல் எடை குறைய வேண்டும் என்று தினந்தோறும் எலுமிச்சம்பழச்சாறு எடுத்து வந்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அது மட்டும் இன்றி பலருக்கும் நெஞ்செரிச்சல் வயிறு மந்தம் போன்றவையும் ஏற்படும். எலுமிச்சை பழச்சாறை அதிகளவு எடுக்கும் பொழுது இவ்வாறான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பாலுடன் எலுமிச்சை கலந்து சாப்பிடக்கூடாது. அந்த வகையில் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் எலுமிச்சைச்சாறு எடுத்துக் கொண்டால் அதனை அடுத்து பால் சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் பால் மற்றும் எலுமிச்சைச் சாறை ஒன்றன்பின் ஒன்றாக குடிப்பது மிகவும் தவறு.