தியேட்டரில் இதை செய்தால் உங்களுக்கு அபராதம்!! இனியாவது பார்த்து நடந்து கொள்ளுங்கள்!!

0
133

தியேட்டரில் இதை செய்தால் உங்களுக்கு அபராதம்!! இனியாவது பார்த்து நடந்து கொள்ளுங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரிதாக செல்லும் இடம் இடம் என்னவென்றால் அது திரையரங்குகள் தான். இங்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே சென்று தனது நேரத்தை செலவிடும் ஒரு பொழுதுபோக்கு இடமாக இந்த திரையரங்குகள் முக்கிய பங்கு வைக்கின்றது.

தற்போதைய காலத்தில் நம்மிடம் ஸ்மார்ட் ஃபோன்கள் இருந்தாலும் திரையரங்குகளில் சென்று அந்த இரண்டு மணி நேர காட்சியை பார்ப்பதற்கு மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு திரையரங்குகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இப்போது அமைக்கப்பட்டுள்ள திரையரங்குகளில் படம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு சாப்பிடுவதற்கு அதிகளவு தின்பண்டங்கள் வைத்து திரையரங்குகளை அதன் உரிமையாளர்கள் லாபத்துடன் இயக்கி வருகின்றனர்.

இப்படி திரையரங்குகள் ஒரு புறம் நடத்தப்பட்டு படங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் பொதுமக்கள் ஆகிய நாம் செய்யும் சிறு தவறுகளால் பலருக்கு சிக்கலாக அமைகின்றது.

அப்படி நாம் என்ன தவறு செய்கின்றோம் என்று கேட்டால் நீங்கள் பார்க்கும் படத்தில் உங்களுக்குப் பிடித்த நடிகர் நடிகை யாரேனும் வந்தால் அவர்களை உங்களது ஸ்மார்ட் போனில் போட்டோ அல்லது வீடியோ முதலியவற்றை எடுத்து விடுகிறீர்கள்.

இவ்வாறு எடுக்கும் புகைப்படத்தை உங்களது நண்பர்கள் தெரிந்தவர்கள் அல்லது உங்களது இணையதள பக்கத்தில் பதிவிடுகிறீர்கள்.இது என்ன தான் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் ஆனால் இது சட்டப்படி ஒரு குற்றமான செயல் ஆகும்.

Cinematography என்ற சட்டத்தின்படி திரையரங்குகளில் போட்டோ மற்றும் வீடியோவை எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பது இணையதளங்களில் பதிவிடுவது நண்பர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் இது சட்டப்படி குற்றமாகும்.

மேலும் இந்த செயலில் ஈடுபடும்போது நீங்கள் கையும் காலமாக பிடிக்கப்பட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே Cinematography சட்டத்தின் படி இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு மூன்று மாதம் முதல் மூன்று வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்களாகிய நீங்கள் திரையரங்குகளுக்கு செல்லும் போது இது போன்ற தவறுகளை செய்து விடாதீர்கள். உங்களது உணர்ச்சிவசத்தாலும் ஆர்வத்தாலும் இதுபோன்று தவறுகள் நடந்து விடுகிறது அதனால் இனி மேலாவது கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

Previous articleஇதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! 10 நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்!!
Next articleWipro நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!!