பாராசிட்டமால் மாத்திரையை வைத்து இப்படி செய்தால் ஒரு மணி நேரத்தில் எலி தொல்லைக்கு குட் பாய் கன்பார்ம்!!

0
52
#image_title

பாராசிட்டமால் மாத்திரையை வைத்து இப்படி செய்தால் ஒரு மணி நேரத்தில் எலி தொல்லைக்கு குட் பாய் கன்பார்ம்!!

எலி அளவில் சிறியவை என்றாலும் இவை மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம்.

எலி நம் வீட்டிற்குள் வருவது எப்படி?

வீட்டிற்கு அருகில் சாக்கடை, டிச்சி உள்ளிட்டவைகள் இருந்தால் எலி பெருக்கம் அதிகம் இருக்கும். இதனால் எலிகள் வீட்டிற்குள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

வீட்டிற்குள் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் அதை மோப்பம் பிடித்துக் கொண்டு எலிகள் வீட்டிற்குள் வந்து விடும்.

மண் தரை உள்ள வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு ஆகியவற்றில் எலிகள் எளிதில் நுழைந்து உற்பத்தியாகி விடும்.

எலியால் மனிதர்களுக்கு பரவும் ஆபத்து நிறைந்த நோய்:-

*லெப்டோஸ்பிரோசிஸ் எனும் மரணத்தை ஏற்படுத்தும் நோய் எலியின் சிறுநீர் மூலம் பரவுகிறது.

*ஹெப்படைடிஸ் ஈ என்ற கிருமிகள் எலியின் மூலம் பரவுகிறது.

*கொடிய நோயான பிளேக் நோய் எலியின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

எலி தொல்லை நீங்க அற்புத வழி:

தேவையான பொருட்கள்:-

*கோதுமை மாவு – 2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*பாராசிட்டமால் மாத்திரை – 2

*கடலை மாவு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

இரண்டு பாராசிட்டமால் மாத்திரை யை ஒரு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பவுலில் கோதுமை மாவு 2 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். இந்த கோதுமை பொருட்களை எலிகள் விரும்பி உண்ணும். நாம் செய்ய கூடிய எலி மருந்தை எலிகள் உண்ண வேண்டும் என்பதற்காக கோதுமை மாவை சேர்த்து கொள்கிறோம்.

அடுத்து கடலை மாவு 2 தேக்கரண்டி எடுத்து கோதுமை மாவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் கலந்து கொள்ளவும். மிளகாய் தூள் எலிகள் உண்டால் அதன் வயிறு வீங்க தொடங்கி விடும். இதற்காக தான் மிளகாய் தூள் பயன்படுத்துகிறோம்.

பிறகு இடித்து தூள் செய்து வைத்துள்ள பாராசிட்டமால் மாத்திரையை அதில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

இதை எலி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். இப்படி செய்தோம் என்றால் எலிகள் அந்த கலவையை உண்டு சிறிது நேரத்தில் செத்து மடிந்து விடும்.