உங்களுக்கு தெம்பு இல்லையா அப்போ உடனே இதை அருந்துங்கள்!!

0
175

உங்களுக்கு தெம்பு இல்லையா அப்போ உடனே இதை அருந்துங்கள்!!

இளநீர் என்பது இயற்கை நமக்களித்த மிகப்பெரிய மருந்தாகும்.தாகம் தீர்க்க மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு சக்தியை அளிக்கும்.மேலும் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு இருக்கிறது.

 

வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிப்பதில் முதல் பொருளாக விளங்குகிறது. இளநீரில் வைட்டமின் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துகளும் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்களும் உள்ளது.இதைதொடர்ந்து உடலில் உள்ள கெட்ட நீரையும் வெளியேற்றும். உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.

ரத்தம் சுத்தமடையும். வயிற்றுக் கோளாறுகளின் போதும் செரிமானப் பிரச்சனைகளின்போதும் இளநீர் குடித்தால் எல்லாம் சரியாகும்.அல்சர் நோயாளிகள் தினமும் காலை நேரத்தில் இளநீர் சாப்பிடலாம்.கோடை காலத்தில் உடல் சூட்டினைத் தணிக்கவும் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களுக்கு அதிகமாக இளநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இளநீர் அருந்துவதால் சருமம் பொலிவு பெறும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இளநீர் குடிக்கலாம்.இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் ஆஸ்துமா, சளி, தொண்டைப் பிரச்சனை உள்ளவர்கள் மேலும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இளநீர் அருந்தலாம்.

இளநீர் எப்போது அருந்த வேண்டும் கீழே கவனியுங்கள் இளநீரில் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இளநீரில் உள்ள சத்துகள் முழுமையாக உடலுக்கு சேர வேண்டுமென்றால் காலையில் வெறும் வயிற்றில்தான் இளநீர் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Previous articleராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! முழு விவரங்கள் இதோ!
Next articleபள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!!