இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!!
ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் அதிகளவு புழுக்கள் உருவாகிறது.இதனால் தாங்க முடியாத வயிற்றுவலி,அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும்.
குடலில் அதிகளவு புழுக்கள் இருந்தால் நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.எனவே குடலில் உள்ள புழுக்களை மலம் வழியாக அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும்.
தீர்வு 01:-
1)எருக்கன் இலை
2)தேன்
ஒரு எருக்கன் இலையை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டவும்.
அதன் பின்னர் 3 துளி தேன் சேர்த்து அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் அனைத்தும் துடிதுடித்து இறந்து ஆசனவாய் வழியாக வெளியேறி விடும்.
தீர்வு 02:-
1)பப்பாளி இலை
கசப்பு தன்மை கொண்ட பப்பாளி இலை துண்டுகள் 1/2 கப் அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதை மைய்ய அரைத்து சாறு எடுத்து குடித்தால் குடற்புழுக்கள் நீங்கி விடும்.
தீர்வு 03:-
1)குப்பைமேனி வேர்
ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி வேரை அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அதை ஒரு கிண்ணத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் குடற்புழுக்கள் அழியும்.
தீர்வு 04:-
1)வேப்பிலை
1/4 கப் அளவு வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்.
தீர்வு 05:-
1)பகல் இலை
இரண்டு அல்லது மூன்று பாகல் இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து குடித்தால் குடற்புழுக்கள் அழிந்து விடும்.