நம் ஒவ்வொருவருக்கும் நிம்மதியான தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.தினமும் 8 முதல் 10 மணி நேர உறங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் மட்டும் உடல் ஆரோக்கியம் மேம்படாது.நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டியதும் அவசியம்.
ஆனால் இக்காலத்தில் மனிதர்கள் தூக்கத்திற்கு குறைவான நேரத்தையே ஒதுக்குகின்றனர்.இதனால் மன அழுத்தம்,உடல் சோர்வு,மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
சிலருக்கு குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் இருக்கும்.இதை நிம்மதியான தூக்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை விட்டு தூங்குவது நிம்மதியான தூக்கத்திற்கான அறிகுறிகள் இல்லை.இது உடல் நலக் கோளாறின் வெளிப்பாடாகும்.
உடல் பருத்து தொப்பை இருப்பவர்கள் தான் குறட்டை விடுவார்கள் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கும் குறட்டை வரும்.இந்த குறட்டையை ஒரு சாதாரண பாதிப்பாக நினைக்காமல் அதில் இருந்து மீள முயலுங்கள்.
குறட்டை விடுபவர்களை விட அருகில் உறங்குபவர்களுக்கு தான் தூக்கம் கெடுகிறது.நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.இதனால் அவர்களுக்கு குறட்டை விடுபவர்கள் மீது வெறுப்பு வரக்கூடும்.
இந்த குறட்டை பாதிப்பை சரி செய்ய எந்தஒரு மருந்து மாத்திரையும் தேவையில்லை.குறட்டையை நிறுத்த தேன் போதும்.தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி தேன் பருகிவிட்டு உறங்கினால் குறட்டை வராமல் இருக்கும்.அதேபோல் மல்லாக்க படுத்து உறங்காமல் ஒருபக்கமாக திரும்பி படுப்பதால் குறட்டை வருவது கட்டுப்படும்.