பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

0
161

நவீன உலகில் பிளாஸ்டிக் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதை பயன் படுத்த தெரிந்த நமக்கு அதனால் உருவாகும் தீங்கை அறிய மறந்து விட்டோம் என்பதுதான் நிதர்சன உண்மை.

இன்றைய சூழலில் எந்த பொருள் வாங்கினாலும், அந்த பொருளுடன் வருவது நெகிழி ஃபை என்பது நிதர்சன உண்மை. பிஸ்கட், காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள், மளிகை சாமான்கள், போன்ற எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளை உள்ளடக்கியது பிளாஸ்டிக் தான். வாங்கிய பொருளை உபயோகிக்க தெரிந்த நமக்கு அதனுடன் வந்த பிளாஸ்டிக் பொருளை எப்படி மறுசுழற்சி செய்ய வேண்டும் அல்லது அதை எப்படி எங்கு சேமிப்பது என்பது பற்றி பலரும் அறிய தவறிவிட்டனர்.

நமது தமிழக அரசு கூட இந்த வருடம் நெகிழி பையை தடை செய்தது. ஆனால் இன்றும் நாம் நெகிழி பையை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். பிளாஸ்டிக் ஆங்காங்கே சேரும் போது சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால். மழை நாட்களில் நீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக உருவாகிறது. இதனால் மலேரியா டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது. நீர் நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளால் நீர் வளம் நிலத்தடியில் சேர்வதை தடுக்கிறது. ஒரு சில நீர்நிலைகள் மறைந்தே போய்கிறது என்பது நிதர்சன உண்மை.

சமீபத்தில் கூட ஆவின் நிறுவனம் தங்களின் நிறுவனத்தில் தயாராகும் பொருளின் பிளாஸ்டிக் இருக்கும் பட்சத்தில் அந்த பிளாஸ்டிக் பொருளை கொண்டு வந்து கொடுத்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம் என ஒரு அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதே போல் மத்திய பிரதேசத்தில் சிலிகுரி எனும் ஊரில் குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக் பொருளை கொண்டு வந்து கொடுத்தால் உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். இது தற்போது நடைமுறையில் செய்து வருகின்றனர். இந்த திட்டம் அந்த ஊர் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்த திட்டத்தை செய்யல் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர்கள் கூறியது குழுவின் தலைவர் சிங் சலூஜா, ”பிளாஸ்டிக் பொருட்கள் நீர்நிலைகளில் கால்வாய்களில் வீசப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் சீராக செல்லாமல் நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உருவாகிறது. இதனால் பல நோய்கள் உண்டாகிறது. அது மட்டுமல்லாமல் நீர் நிலத்தடியில் சேர்வதை இந்த பிளாஸ்டிக் தடுக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திட்டமிட்டோம். அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleபாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!!
Next articleமீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி ! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!!