வெளியே போறீங்களா? இதை எடுத்துட்டு போங்க! கிருமிகள் உங்களை நெருங்காது!

Photo of author

By Kowsalya

2019ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது என்றே சொல்லலாம். இப்பொழுது கொரோனாவில் இரண்டாவது அலை நம்மை பயமுறுத்தி சாவிற்கு அழைத்துச் சென்று வருகிறது.

 

என்னதான் ஊரடங்கு காலத்தில் உள்ளே இருந்தாலும் அத்தியாவசியமான பொருட்களை வாங்க நாம் வெளியே சென்றுதான் ஆகவேண்டும்.அப்படி நீங்கள் செல்லும் பொழுது இந்த மூலிகைகள் அடங்கிய சிறு மூட்டையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

 

இப்பொழுது அதில் என்னென்ன மூலிகைகளை சேர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

 

1. முதலில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஓமத்தை போட்டுக் கொள்ளுங்கள்.

3. கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

4. சிறிய துண்டு அளவிற்கு பச்சை கற்பூரத்தை பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்.

5. பின் இதனுடன் 5 மிளகு மற்றும் சிறிதளவு வசம்பு இவற்றை பொடியாக்கி சேர்த்து கொள்ளவும்.

6. இதை சிறிய மூட்டையாகக் கட்டிக் கொள்ளுங்கள்.

 

இதனை நீங்கள் கைகளில் கட்டிக் கொள்ளலாம். இதில் உள்ள மூலிகை பொருட்கள் எந்த ஒரு கிருமிகளையும் நுரையீரலை தாக்காதவாறு உங்களை பாதுகாத்துக் கொள்ளும்.

 

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை நீங்கள் இதை முகர்ந்து பார்க்கும் பொழுது மூக்கு வழியாக தொண்டையில் தொற்று கிருமிகள் ஏற்பட்டிருந்தாலும் இந்த மூலிகை அந்தக் கிருமிகளை கொல்லும் சக்தி வாய்ந்தது.

 

மூச்சுத்திணறல், சைனஸ் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதனை முகர்ந்து பார்க்கும் பொழுது உங்களுக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும்.

இதனை கண்டிப்பாக பயன்படுத்திப்பாருங்கள். கொரோனா தொற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.